நல்ல மருமகள் ஆகவேண்டுமா? (Tamil Edition)

125.00

Description

நல்ல மருமகள் ஆகவேண்டுமா? (Tamil Edition)
Price: ₹125.00
(as of Aug 05, 2024 05:54:30 UTC – Details)


நித்யா, பிரசாத் இருவருக்குமே கணிசமான பெரிய சம்பளம்!
நித்யாவின் அப்பா சிவகுமாரும் நல்ல வர்த்தகர் என்பதால் கணிசமான பணத்துக்கு சொந்தக்காரர்.
மகளுக்காக எதைச் செய்யவும் அவர் தயார்.
கொஞ்சமும் அகந்தை இல்லாத குடும்பம்!
ஆரம்ப நாட்களில் நித்யா காரில் போய் பழகி, வீட்டிலும் சகல வசதிகளையும் அனுபவித்தாள்!
புகுந்த வீடு அதில் பாதி கூட இல்லை. வசதிகளும் குறைச்சல். சில பிறந்த வீட்டு விஷமிகள் அங்கேயும் உண்டு! சம்பந்தி விருந்துக்கு வந்தபோது,
“என்னடீ? நீ அத்தனை வசதியா வாழ்ந்துட்டு, எப்படீ இங்கே குடித்தனம் நடத்தப் போறே? இதெல்லாம் சரிப்படுமா?”
பச்சோந்திகள். அடக்கி விட்டாள் அவர்களை.
பிரசவத்துக்குக் கூட கடைசி நேரத்தில் பிறந்த வீட்டுக்குப் போய், குழந்தை பெற்ற பிறகு மூன்று மாதங்களில் இங்கே திரும்பி விட்டாள்! அதனால் மாமனார் வாசுவுக்கு மருமகள் மேல் அசாத்திய மரியாதை!
‘இது மாதிரி ஒரு பெண் யாருக்கு அமையும்?’
‘மாமியாருக்கும் அது உண்டு. ஆனால் நல்லதை நினைக்க எங்கே விடுகிறார்கள்? அவளைக் கலைக்க ஒரு கூடப் பிறந்த கூட்டம் கிருமி போல சுற்றுகிறதே!
தவிர, நித்யாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள்.
“நித்யா! உன் வீட்டுக்காரர் பேங்க்ல அதிகாரி! வட்டி சலுகையோட லோன் கிடைக்கும். நீயும் கைநிறைய சம்பாதிக்கிறே! குழந்தையும் பிறந்தாச்சு. பெரிசா ஒரு வீட்டை கட்டிட்டு குடிபோக மாட்டியா? உன்னை விடக் கீழே உள்ளவங்க வீட்டைக் கட்டியாச்சு! நீ பேசாம இருந்தா எப்படி?”
“இதப்பாருடி! அவளுக்கு பணத்துக்கு என்ன கஷ்டம். ஒரு வார்த்தை சொல்லிட்டா, அவங்கப்பாவே வீட்டை வாங்கித் தரமாட்டாரா?”
“பிழைக்கிற வழியைப் பாருடி!”
“அப்பா தருவார். எனக்கது அவசியமில்லை. எங்களால கட்ட முடியும். ஆனா இப்ப அவசியமில்லை. எங்க சொந்த வீட்லதானே நாங்க இருக்கோம்.”
“அது உன் மாமனார் வீடு!”
“அப்படின்னா, எங்க வீடுதானே?”
“மாமியார் விடுவாங்களா? உன் மச்சினன் ஹரிக்கும் அதுல பங்கு இருக்கில்லையா?”
“இதப் பாருங்க! நான் மாமனார், மச்சினன்னு பிரிச்சுப் பாக்கலை. நாங்க எல்லாரும் ஒண்ணுதான். அழகான ஒரு கூடுதான் குடும்பம். அது உடையக்கூடாது. எங்க யாருக்கும் அதுல உடன்பாடு இல்லை!”
“நீ பிழைக்கத் தெரியாதவள்!”
“நாங்க பணத்தை மட்டுமே பெரிசா எடுத்துக்கறதில்லை.”
“இதப்பாருடி! தாயும், பிள்ளையுமா இருந்தாலும் வாயும், வயிறும் வேறதான். நாளைக்கு உன் மாமியார் சுருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டா, தாங்குவியா?”
“எதுக்கு சொல்லணும்?”
“இவ திருந்த மாட்டா!”
நித்யாவுக்கு கல்யாணம் ஆன புதிதில் முதல் சம்பளம் வாங்கிய அன்றைக்கு இதுதான் நடந்தது.
தன் செலவுக்கு என்ன தேவையோ, அதை வைத்துக் கொண்டு, பிரசாத்திடம் மீதியைத் தந்தாள்.
அதுவரை குடும்பம் அம்மா கையில்தான்!
பிரசாத் அம்மாவிடம் இரண்டு சம்பளங்களையும் தர, அப்பா குறுக்கே வந்தார்.
“பிரசாத், ஹரி… நித்யா மூணு பேரும் இப்பிடி வந்து ஒக்காருங்க.” “எதுக்குப்பா?”
“இந்த வீட்டுக்கு ஒரு பொது பட்ஜெட் நான் போட்டு வச்சிருக்கேன். அதாவது மளிகை, பால், காய்கறிகள், லைட் பில், டெலிபோன் பில், பராமரிப்பு செலவு இந்த மாதிரி உள்ளது பொது பட்ஜெட்! மற்றபடி மொபைல், பெட்ரோல், துணிமணிகள், சினிமா, ஓட்டல் எல்லாம் அவரவர் சொந்த செலவு! புரியுதா?”

ASIN ‏ : ‎ B0DBV788V3
Publisher ‏ : ‎ Geeye Publications (31 July 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 551 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 89 pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “நல்ல மருமகள் ஆகவேண்டுமா? (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *